பரமத்திவேலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.50 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம்

பரமத்திவேலூரில் செயல்பட்டு வரும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.50 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம் விடப்பட்டது.
.
.
Published on

பரமத்திவேலூரில் செயல்பட்டு வரும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் தேங்காய் மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு சுமார் 3 டன் தேங்காய்களை ‌ விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். 

இதில் அதிகபட்சமாக கிலோ ரூ.28.50-க்கும், குறைந்த பட்சமாக ரூ.25-க்கும், சராசரியாக ரூ.26.50-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.79ஆயிரத்து 156-க்கு வர்த்தகம் நடைபெற்றது.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற ‌ஏலத்திற்கு சுமார் 1¾ டன் தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். 

இதில் அதிகபட்சமாக கிலோ ‌ஒன்று ரூ.29-க்கும், குறைந்தபட்சமாக ரூ.23.65-க்கும், சராசரியாக ரூ.‌26.80-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.50 ஆயிரத்து 341-க்கு வர்த்தகம் நடைபெற்றது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com