பரமத்திவேலூர் பேட்டை மாரியம்மனுக்கு சித்திரை மாத உற்சவ விழா

பரமத்திவேலூர் பேட்டை மாரியம்மனுக்கு சித்திரை மாத உற்சவ விழா நடந்தது.
.
.
Published on

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர்  பேட்டை ஸ்ரீ சக்தி கண்ணனூர் புது மாரியம்மனுக்கு சித்திரை மாத உற்சவத்தினை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம் ,மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து சிறப்பு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. புதுமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். 

இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com