உலக பூமி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி

பரமத்திவேலூரில் உலக பூமி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
உலக பூமி தினத்தை முன்னிட்டு மண் காப்போம் இயக்கம் மற்றும் ஈசா யோகா நிறுவனம் சார்பாக தமிழ்நாடு முழுவதும் மண்ணோடு
உலக பூமி தினத்தை முன்னிட்டு மண் காப்போம் இயக்கம் மற்றும் ஈசா யோகா நிறுவனம் சார்பாக தமிழ்நாடு முழுவதும் மண்ணோடு
Published on

பரமத்திவேலூர்:

சத்குரு தொடங்கியுள்ள மண் காப்போம் இயக்கம் சார்பாக உலக பூமி தினமான நேற்று தமிழ்நாடு முழுவதும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 

அதேபோல் பரமத்தி வேலூரில் பேருந்து நிலையம், பள்ளி சாலை மற்றும் பாண்டமங்கலம் சாலை என 3 இடங்களில் மண் காப்போம் இயக்கம் குறித்த விழிப்புணர்வு நடைபெற்றது.

30 நிமிடங்கள் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பரமத்தி வேலூர் காவல் டி.எஸ்.பி. ராஜாரணவீரன், கந்தர்சாமி கண்டர் கல்வி நிறுவனங்களின் தலைவர் சோமசுந்தரம், கல்லூரி முதல்வர் தங்கராஜு, கண்ணன் ஹார்டுவேர்ஸ் உரிமையாளர் அரிமா. கண்ணன், சைலேந்திரபாபு ஸ்போட்ஸ் அகாடமி நிறுவனர் வழக்கறிஞர் தில்லை குமார், அரசு வழக்கறிஞர் செல்லப்பா செந்தில் மற்றும் தேசிய மாணவர் படை அலுவலர், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் மற்றும் பேராசிரியர்கள் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.

இதில் பரமத்தி வேலூர் கந்தசாமி கண்டர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த தேசிய மாணவர் படை, கந்தசாமி கண்டர் கல்லூரியின் சுற்றுச் சூழல் இயக்க மாணவர்கள், நாட்டு நலத் திட்ட மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் மற்றும் ஈஷா தன்னார்வலர்கள் உட்பட 400 க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தாவரவியல் துறை தலைவர் பேராசிரியர் ராஜு மற்றும் தாவரவியல் துறையினர் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com