

நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) முதல் 4 நாட்களுக்கு நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் விளக்கம் அளித்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பில்லை. இன்று தென்கிழக்கு திசையில் இருந்தும், நாளை முதல் 3 நாட்களுக்கு கிழக்கு திசையில் இருந்தும் காற்று வீசும்.
வெப்பநிலையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக 93.2 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 68 டிகிரியாகவும் இருக்கும். காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக 85 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக முறையே 40, 35 சதவீதமாகவும் இருக்கும்.
சிறப்பு வானிலையை பொறுத்தவரை நாமக்கல் மாவட்டத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு, மழை பெய்ய வாய்ப்பு இல்லை.
கடந்த வாரம் இறந்த கோழிகள் பெரும்பாலும் மேல்மூச்சு குழல் அயற்சியால் பாதிக்கப்பட்டு இறந்தது கோழியின நோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
எனவே பண்ணையாளர்கள் கோழிப்பண்ணைகளில் தகுந்த குளிர்கால பராமரிப்பு முறைகளை கையாள வேண்டும். மேலும் கோழிகளில் வெப்ப அயற்சியை தடுக்க பண்ணையாளர்கள் தெளிப்பான்களை பயன்படுத்தலாம்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.