நாமக்கல்லுக்கு சரக்கு ரெயிலில் 2,400 டன் தவிடு வந்தது

சரக்கு ரெயில் மூலம் 2,400 டன் தவிடு நாமக்கல்லுக்கு வந்து சேர்ந்தது.
ரெயிலில் வந்த தவிடு மூட்டைகளை இறக்கும் தொழிலாளர்கள்.
ரெயிலில் வந்த தவிடு மூட்டைகளை இறக்கும் தொழிலாளர்கள்.
Published on

நாமக்கல்:

நாமக்கல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நூற்றுக்கணக்கான கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு வளர்க்கப்படும் கோழிகளுக்கு தேவையான தீவன மூலப்பொருட்கள் வடமாநிலங்களில் இருந்து சரக்கு ரெயிலில் கொண்டு வரப்படுகின்றன.

அந்த வகையில் நேற்று 2 ஆயிரத்து 400 டன் தவிடு உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து சரக்கு ரெயிலில் கொண்டு வரப்பட்டது. இவை நாமக்கல் ரெயில் நிலையத்தில் 120 லாரிகளில் ஏற்றப்பட்டு, கோழிப்பண்ணைகள் மற்றும் கோழித்தீவன அரவை ஆலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டன.

X

Maalai Malar
www.maalaimalar.com