நாமகிரிப்பேட்டையில் ரூ.10 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம்

நாமகிரிப்பேட்டையில் நடந்த ஏலத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான மஞ்சள் ஏலம் விடப்பட்டது
.
.
Published on

நாமகிரிப்பேட்டையில் உள்ள ராசிபுரம் தாலுகா கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனை சங்க கிளை வளாகத்தில்  மஞ்சள் ஏலம் நடந்தது.

நாமகிரிப்பேட்டை, ஒடுவன்குறிச்சி, புதுப்பட்டி, முள்ளுக்குறிச்சி, மெட்டாலா, பேளுக்குறிச்சி, அரியாக்கவுண்டம்பட்டி, ஆத்தூர், ஊனத்தூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் மஞ்சளை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். சேலம், ஈரோடு, நாமகிரிப்பேட்டை, ஒடுவன்குறிச்சி, ஆத்தூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து மஞ்சளை ஏலம் எடுத்தனர்.

இந்த ஏலத்திற்கு விரலி ரகம் 180 மூட்டைகளும், உருண்டை ரகம் 65 மூட்டைகளும், பனங்காலி ரகம் 5 மூட்டைகளும் கொண்டு வரப்பட்டு இருந்தன. 

இதில் விரலி ரகம் குறைந்தபட்சம் ஒரு குவிண்டால் (100 கிலோ) ரூ.6 ஆயிரத்து 59 முதல் அதிகபட்சமாக ஒரு குவிண்டால் ரூ.9 ஆயிரத்து 333-க்கும், உருண்டை ரகம் ஒரு குவிண்டால் குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரத்து 739 முதல் அதிகபட்சமாக ஒரு குவிண்டால் ரூ.7 ஆயிரத்து 19-க்கும், பனங்காலி் ரகம் குறைந்தபட்சம் ஒரு குவிண்டால் ரூ.16 ஆயிரத்து 612 முதல் அதிகபட்சமாக ஒரு குவிண்டால் ரூ.16 ஆயிரத்து 875-க்கும் ஏலம் விடப்பட்டது. நேற்று நடந்த ஏலத்தில் 250 மஞ்சள் மூட்டைகள் ரூ.10 லட்சத்துக்கு ஏலம் போனது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com