புகையிலை ஒழிப்பு பிரசாரம்

புகையிலை ஒழிப்பு பிரசாரம் நடந்தது.
பிரசார வாகனத்தை  இன்ஸ்பெக்டர் ரவி கொடியசைத்து தொடங்கி வைத்த காட்சி.
பிரசார வாகனத்தை இன்ஸ்பெக்டர் ரவி கொடியசைத்து தொடங்கி வைத்த காட்சி.
Published on

குமாரபாளையம்:

குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட், பள்ளிபாளையம் பிரிவு, ஆனங்கூர் பிரிவு, காவேரி நகர், சின்னப்பநாயக்கன்பாளையம், உள்ளிட்ட பல்வேறு பகுதியில்  பிரம்ம குமாரிகள் அமைப்பின் சார்பில் புகையிலை ஒழிப்பு பிரசாரம் நடந்தது. 

ஜவுளி உற்பத்தியாளர் அண்ணாதுரை தலைமை வகித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி பங்கேற்று, பிரசாரத்தை தொடங்கி வைத்தார். புகையிலை பாக்கெட், பீர் பாட்டில் போன்று வேடமிட்டு வந்து பிரசாரம் செய்தனர்.

பொதுமக்களுக்கு இது குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை சப்-இன்ஸ்பெக்டர் மலர்விழி, தே.மு.தி.க. மாவட்ட துணை செயலர் மகாலிங்கம் வழங்கினர். இதற்கான பிரசார வாகனத்தை இன்ஸ்பெக்டர் ரவி உள்ளிட்ட பலர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com