நாய் குறுக்கே பாய்ந்ததில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி சாவு

இரவு சுமார் 10 மணி அளவில் பாண்டமங்கலம் சென்று அங்குள்ள ஒரு ஓட்டலில் உணவு வாங்கிக்கொண்டு கொளக்காட்டுப்புதூர் திரும்பி கொண்டிருந்தார். கோழிக்கடை அருகே வந்த போது திடீரென நாய்கள் சாலையின் குறுக்கே ஓடியது. இதில் ஒரு நாய் செந்தில் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
நாய் குறுக்கே பாய்ந்ததில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி சாவு
Published on

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கொளக்காட்டுப்புதூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில் (42). இவர் மரம் ஏறும் கூலித்தொழிலாளி.

இவர் கடந்த 15-ந் தேதி இரவு சுமார் 10 மணி அளவில் பாண்டமங்கலம் சென்று அங்குள்ள ஒரு ஓட்டலில் உணவு வாங்கிக்கொண்டு கொளக்காட்டுப்புதூர் திரும்பி கொண்டிருந்தார்.

அப்போது அ.தி.மு.க. ஒன்றிய அலுவலகம் எதிரே உள்ள கோழிக்கடை அருகே வந்த போது திடீரென நாய்கள் சாலையின் குறுக்கே ஓடியது. இதில் ஒரு நாய் செந்தில் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் செந்தில் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்தார்.

பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி செந்தில் உயிரிழந்தார்.

இது குறித்து பரமத்தி வேலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com