சுப விசேஷங்கள் இல்லாததால் பூக்களின் விலை வீழ்ச்சி

பூக்களை விவசாயிகள் உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பரமத்தி வேலூரில் உள்ள 2 பூக்கள் ஏல சந்தைகளுக்கும் கொண்டு வருகின்றனர்.பூக்கள் விலை சரிவடைந்துள்ளதால் பூக்கள் பயிர் செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தற்பொழுது தேய்பிறை நடைபெற்று வருவதால் எந்த விசேஷங்களும் இல்லாததால் பூக்கள் நிலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
சுப விசேஷங்கள் இல்லாததால் பூக்களின் விலை வீழ்ச்சி
Published on

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா நகப்பாளையம், செல்லப்பம்பாளையம் கபிலர்மலை, தண்ணீர் பந்தல், ஆனங்கூர், பாகம்பாளையம், சின்ன மருதூர், பெரிய மருதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குண்டு மல்லி, முல்லைப்பூ , அரளி, ரோஜா, செவ்வந்தி, கனகாம்பரம் சம்பங்கி உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்களை விவசாயிகள் பயிர் செய்துள்ளனர்.

இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பரமத்தி வேலூரில் உள்ள 2 பூக்கள் ஏல சந்தைகளுக்கும் கொண்டு வருகின்றனர். வேலூர், ஜேடர்பாளையம், கபிலர்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனர்.

ஏலம் எடுத்த பூக்களை வியாபாரிகள் பல்வேறு வகையான மாலைகளாகவும் தோரணங்களாகவும் கட்டி விற்பனை செய்கின்றனர். அதேபோல் சில வியாபாரிகள் உதிரிப்பூக்களை பிளாஸ்டிக் கவரில் போட்டு பாக்கெட்டுகளாக உள்ளூர் பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

நேற்று நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லி கிலோ ரூ.500-க்கும், சம்பங்கி கிலோ ரூ.50- க்கும், அரளி கிலோ ரூ.80- க்கும், ரோஜா கிலோ ரூ.200- முல்லைப் பூ கிலோ ரூ.400-க்கும், செவ்வந்திப்பூ ரூ.150- க்கும், கனகாம்பரம் ரூ.500-க்கும் ஏலம். போனது.

பூக்கள் விலை சரிவடைந்துள்ளதால் பூக்கள் பயிர் செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தற்பொழுது தேய்பிறை நடைபெற்று வருவதால் எந்த விசேஷங்களும் இல்லாததால் பூக்கள் நிலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com