மூதாட்டி சிகிச்சை பலனின்றி சாவு

நன்செய் இடையாறு பகுதியில் 80 வயது மதிக்கதக்க மூதாட்டி ஒருவர் அந்தப் பகுதியில் உள்ள வீடுகளில் உணவு வாங்கி சாப்பிட்டு வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த மூதாட்டிக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது.
மூதாட்டி சிகிச்சை பலனின்றி சாவு
Published on

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா நன்செய் இடையாறு பகுதியில் 80 வயது மதிக்கதக்க மூதாட்டி ஒருவர் அந்தப் பகுதியில் உள்ள வீடுகளில் உணவு வாங்கி சாப்பிட்டு வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த மூதாட்டிக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. அந்தப் பகுதியை சேர்ந்தவர்கள் மூதாட்டியை பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில் சிகிச்சை பலனின்றி மூதாட்டி இறந்து விட்டார். இது குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இறந்த மூதாட்டி யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com