பரமத்தி வேலூர் பகுதிகளில் பூக்களின் விலை உயர்வு

நேற்று நடந்த பூ ஏலத்தில் குண்டுமல்லி கிலோ ரூ.700-க்கு விற்பனையானது. இவற்றை விவசாயிகள் அறுவடை செய்து ப.வேலூரில் உள்ள பூ உற்பத்தியாளர் சங்கத்திற்கு தினமும் கொண்டு வந்து ஏலத்தில் விற்பனை செய்கின்றனர்.
பரமத்தி வேலூர் பகுதிகளில் பூக்களின் விலை உயர்வு
Published on

பரமத்தி வேலூர்:

சுப முகூர்த்த நாட்களை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் நேற்று நடந்த பூ ஏலத்தில் குண்டுமல்லி கிலோ ரூ.700-க்கு விற்பனையானது.

பரமத்திவேலூர் தாலுகா பகுதியில் உள்ள பிலிக்கல்பா ளையம், சாணார்பாளையம், வேலூர் பரமத்தி, கரூர் மாவட்டம் சாமங்கி, வேட்ட மங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குண்டுமல்லி, முல்லைப்பூ, சம்பங்கி, சாமந்திப்பூ, அரளி பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது.

இவற்றை விவசாயிகள் அறுவடை செய்து ப.வேலூரில் உள்ள பூ உற்பத்தியாளர் சங்கத்திற்கு தினமும் கொண்டு வந்து ஏலத்தில் விற்பனை செய்கின்றனர். கடந்த சில வாரங்களாக விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.

கோவில் திருவிழா மற்றும் சுப முகூர்த்த காரணங்களால் பூ தேவை அதிகரித்துள்ளது. பரமத்தி வேலூரில் உள்ள பூ உற்பத்தியாளர் சங்கத்தில் நேற்று நடந்த ஏலத்தில் குண்டு மல்லி கிலோ ரூ.700-க்கும், சம்பங்கி ரூ.170-க்கும், அரளி ரூ.280 -க்கும் விற்பனையாகின.

இதே போல் ஒரு கிலோ சம்பந்தி பூ ரூ.250-க்கும், முல்லைப்பூ கிலோ ரூ.600-க்கும் விற்பனையாகின. சுப முகூர்த்த நாட்களை முன்னிட்டு பூக்களின் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com