பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில்விடிய, விடிய கனமழை; விவசாயிகள் மகிழ்ச்சி

பரமத்தி வேலூர் பல்வேறு பகுதிகளில் நேற்று பகல் சுமார் 11.30 மணிஅளவில் திடீரென சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது. அதனைத் தொடர்ந்து மழை சற்று வேகமாக பலத்த மழை பெய்ய ஆரம்பித்தது.
பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில்விடிய, விடிய கனமழை; விவசாயிகள் மகிழ்ச்சி
Published on

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், பரமத்தி, நன்செய் இடையாறு, பாலப்பட்டி, மோகனூர், கபிலர்மலை, ஒத்தக்கடை, நல்லூர் , கந்தம்பாளையம், பொத்தனூர், பாண்ட மங்கலம், வெங்கரை, பிலிக்கல்பாளையம், ஆனங்கூர், ஜேடர்பாளையம், சோழ சிராமணி, பெருங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று பகல் சுமார் 11.30 மணிஅளவில் திடீரென சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது.

இரவு முழுவதும்

அதனைத் தொடர்ந்து மழை சற்று வேகமாக பலத்த மழை பெய்ய ஆரம்பித்தது. பகலில் விட்டு விட்டு பெய்த நிலையில் இரவு முழுவதும் பலத்த மழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக தார் சாலை வழியாக சென்று கொண்டிருந்த இருசக்கர வாகன ஓட்டிகள் , நடந்து சென்ற பொதுமக்கள் நனைந்து கொண்டு சென்றனர்.

அதேபோல் சாலை ஓரங்களில் போடப்பட்டிருந்த கட்டில் கடைகள், சிற்றுண்டி கடைகள், பூக்கடைகள் பழக்கடைகள், பலகார கடைகள், துணிக்கடைகள், மண்பாண்டம் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் பல்வேறு கடைக்காரர்கள் கனமழையின் காரணமாக வியாபாரம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர்.

விவசாயிகள் மகிழ்ச்சி

தொடர் மழையின் காரணமாக தார் சாலையின் ஓரத்தில் நெடுகிலும் ஆங்காங்கே மழை நீர் தேங்கி நிற்கிறது. வெப்ப சீதோசன நிலை மாறி குளிர்ச்சியான சீதோசன நிலை ஏற்பட்டுள்ளது. மழையின் காரணமாக பயிர்கள் துளிர் விடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com