கபிலர்மலை அருகே மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி சாவு

பழனியப்பன். இவரது மனைவி அங்கம்மாள் (88). இவர் தோட்டத்திற்கு மாட்டை பிடித்துக்கொண்டு ஜேடர்பாளையத்தில் இருந்து கபிலர்மலை செல்லும் சாலையை கடக்க முயன்றுள்ளார்.கபிலர்மலை நோக்கி வந்த இரு சக்கர வாகனம் ஒன்று அங்கம்மாள் மீது மோதியுள்ளது.
கபிலர்மலை அருகே மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி சாவு
Published on

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை அருகே உள்ள பெரியசோளிபாளையம் செம்மடை பகுதியைச் சேர்ந்தவர் பழனியப்பன். இவரது மனைவி அங்கம்மாள் (88). இவர் தோட்டத்திற்கு மாட்டை பிடித்துக்கொண்டு ஜேடர்பாளையத்தில் இருந்து கபிலர்மலை செல்லும் சாலையை கடக்க முயன்றுள்ளார்.

அப்போது செம்மடையில் இருந்து கபிலர்மலை நோக்கி வந்த இரு சக்கர வாகனம் ஒன்று அங்கம்மாள் மீது மோதியுள்ளது. இதில் தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் படுகாயமடைந்த அங்கம்மாளை அவ்வழியாக சென்றவர்கள் காப்பாற்றி கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் அங்கம்மாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் இரு சக்கர வாகனத்தில் வந்த பெரியசோளிபாளையம் செம்மடை பகுதியைச் சேர்ந்த சக்திவேல் (45) என்பவர் படுகாயமடைந்து கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து ஜேடர்பாளையம் போலீசில் புகார் செய்தனர் புகாரின் பேரில் மோட்டார் சைக்கிளை அதிவேகமாக ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய சக்திவேல் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com