மனைவி பிரிந்த ஏக்கத்தில் கணவன் தூக்கு போட்டு தற்கொலை

மாரிமுத்து (வயது 36). இவர் அந்த பகுதியில் உள்ள தேங்காய் குடோனில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.கணவன்- மனைவி இடையே தொடர்ந்து குடும்ப பிரச்சினை இருந்து வந்ததன் காரணமாக மனைவி அவரிடம் இருந்து பிரிந்து தனியாக சென்று விட்டார்.
மனைவி பிரிந்த ஏக்கத்தில் கணவன் தூக்கு போட்டு தற்கொலை
Published on: 

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே வெட்டுக்காட்டு புதூர் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 36). இவர் அந்த பகுதியில் உள்ள தேங்காய் குடோனில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

கணவன்- மனைவி இடையே தொடர்ந்து குடும்ப பிரச்சினை இருந்து வந்ததன் காரணமாக மனைவி அவரிடம் இருந்து பிரிந்து தனியாக சென்று விட்டார்.

தற்கொலை

இந்த நிலையில் மாரிமுத்து வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது . ஏற்கனவே மனைவி பிரிந்து சென்ற மனவேதனையில் இருந்த மாரிமுத்து நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத போது விட்டத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து பரமத்தி வேலூர் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மாரிமுத்து தற்கொலையில் வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com