பரமத்தியில் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்

ஆசிரியர்களுக்கு 2-ம் பருவத்திற்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி பரமத்தி வட்டார வள மையம் சார்பில் பரமத்தி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. பயிற்சியை முதுநிலை விரிவுரையாளர் வேலு, வட்டார கல்வி அலுவலர் கவுரி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் சுபா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
பரமத்தியில் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம் நடைபெற்ற போது எடுத்த படம்.
பரமத்தியில் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம் நடைபெற்ற போது எடுத்த படம்.
Published on

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தியில் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் 4 மற்றும் 5-ம் வகுப்பு கற்பிக்கும் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு 2-ம் பருவத்திற்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி பரமத்தி வட்டார வள மையம் சார்பில் பரமத்தி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

பயிற்சியை முதுநிலை விரிவுரையாளர் வேலு, வட்டார கல்வி அலுவலர் கவுரி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் சுபா ஆகியோர் தொடங்கி வைத்தனர். இணை இயக்குநர் ராஜேந்திரன் பயிற்சியை பார்வையிட்டு ஆசிரியர்களுக்கு வகுப்பறை செயல்பாடுகளுக்கு அப்பாற்பட்டு மாணவர்களுக்கு படைப்பாற்றல் சிந்தனைகள் வளர்த்தல், அன்றாட வாழ்வியலில் கணக்குகளின் பயன்பாடு, தற்கால சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாணவர்களை அணுகி அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் முறை ஆகியவை குறித்து அறிவுரை வழங்கினார்.

தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடத்தில் புதிய இணைப்புகள் மற்றும் செயல்பாடுகளை மாவட்ட அளவில் பயிற்சி பெற்ற கருத்தாளர்களால் விளக்கம் அளிக்கப்பட்டது. பயிற்சியில் 61 தொடக்க நிலை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com