குடும்ப தகராறில் டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை

பழனிச்சாமி (51) டிரைவர். இவர் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்ததால் இவருக்கும், அவரது மனைவி துளசிமணிக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்தபோது கணவன், மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
குடும்ப தகராறில்  டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை
Published on

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே உள்ள அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி (51) டிரைவர். இவர் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்ததால் இவருக்கும், அவரது மனைவி துளசிமணிக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று பழனிச்சாமி மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்தபோது கணவன், மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் பழனிச்சாமி மனமுடைந்த நிலையில் இருந்து வந்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் மனைவி துளசிமணி வெளியில் சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்தபோது பழனிச்சாமி வீட்டின் விட்டத்தில் சேலையால் தூக்கு போட்டு தொங்கிக்கொண்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கணவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். ஆனால் பழனிச்சாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com