நாமக்கல்லில் ரூ.13¾ லட்சத்துக்கு பருத்தி ஏலம்

வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம்.இந்த ஏலத்துக்கு அண்டை மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் 665 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்து இருந்தனர்.
நாமக்கல்லில் ரூ.13¾ லட்சத்துக்கு பருத்தி ஏலம்
Published on

நாமக்கல்:

நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம். வழக்கம்போல் நேற்றும் பருத்தி ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு நாமக்கல், நாமகிரிப்பேட்டை, ராசிபுரம், வேலகவுண்டம்பட்டி, புதுச்சத்திரம், எருமப்பட்டி, பவித்திரம், சேந்தமங்கலம் என மாவட்டம் முழுவதும் இருந்தும், அண்டை மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் 665 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்து இருந்தனர்.

ஆர்.சி.எச். ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.6 ஆயிரத்து 290 முதல் ரூ.7 ஆயிரத்து 419 வரையிலும், கொட்டு ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரத்து 219 முதல் ரூ.5 ஆயிரத்து 609 வரையிலும் ஏலம் போனது. இவை ரூ.13 லட்சத்து 75 ஆயிரத்துக்கு விற்பனையானது.

இந்த பருத்தி மூட்டைகளை திருப்பூர், திண்டுக்கல், தேனி, சேலம், கொங்கணாபுரம், கோவை, அவினாசி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் ஏலம் எடுத்து சென்றனர். நேற்று ஏலத்திற்கு டி.சி.எச். ரக பருத்தி வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com