திருச்செங்கோட்டில் கட்டிட தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை

சசிகுமார் (வயது 27). இவர் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இன்னும் திருமணம் ஆகவில்லை. அடிக்கடி குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். மேலும் ஏற்கனவே 2 முறை தற்கொலைக்கும் முயன்றுள்ளார் என கூறப்படுகிறது.
திருச்செங்கோட்டில் கட்டிட தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை
Published on

திருச்செங்கோடு:

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சாணார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 27). இவர் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இன்னும் திருமணம் ஆகவில்லை. சசிகுமாரின் தந்தை இறந்துவிட்ட நிலையில் தாயுடன் வசித்து வந்தார்.

இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. அடிக்கடி குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். மேலும் ஏற்கனவே 2 முறை தற்கொலைக்கும் முயன்றுள்ளார் என கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி சசிகுமாரின் தாய் உறவினர் திருமணத்திற்காக பல்லடம் சென்று விட்டார். அன்று மாலை வீட்டில் தனியாக இருந்த சசிகுமார் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும் தனது வாட்ஸ் அப்பில் சோகமான ஸ்டேடஸ்களை வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

இதை பார்த்து சந்தேகமடைந்த இவரது நண்பர்கள் சசிகுமார் வீட்டிற்கு வந்தனர். அங்கு அவர் தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அவரை மீட்டு திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

இது குறித்து திருச்செங்கோடு டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com