திருச்செங்கோட்டில் ரூ.45 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது.பருத்தி, எள் மற்றும் கடலைக்காய் ஏலம் வருகிற 30-ந் தேதி நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏலத்திற்கு கொண்டு வரப்பட்ட பருத்தி மூட்டைகள்.
ஏலத்திற்கு கொண்டு வரப்பட்ட பருத்தி மூட்டைகள்.
Published on

திருச்செங்கோடு:

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் நடைபெற்ற ஏலத்திற்கு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 1,732 பருத்தி மூட்டைகளை கொண்டு வந்திருந்தனர்.

இதில் பி.டி. ரகம் பருத்தி குவிண்டாலுக்கு ரூ.6,469 முதல் ரூ.7,520 வரையிலும், சுரபி ரகம் பருத்தி குவிண்டாலுக்கு ரூ.7,300 முதல் ரூ.8,100 வரையிலும் விலை போனது. இதன்படி ரூ.45 லட்சத்திற்கு பருத்தி விற்பனையானது.

எள்

இதேபோல் 10 மூட்டை எள் ஏலத்திற்கு வந்தது. இதில் கருப்பு எள் கிலோ ரூ.122 முதல் ரூ.169 வரையிலும், சிகப்பு எள் கிலோ ரூ.126 முதல் ரூ.173 வரையிலும், வெள்ளை எள் கிலோ ரூ.143 முதல் ரூ.176 வரையிலும் விலை போனது. மொத்தம் ரூ.1 லட்சத்துக்கு விற்பனை நடைபெற்றது.

அடுத்த பருத்தி, எள் மற்றும் கடலைக்காய் ஏலம் வருகிற 30-ந் தேதி நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com