போக்குவரத்திற்கு இடையூறாக‌ இருந்த கடைகள் அகற்றம்

பரமத்திவேலூரில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த கடைகளை போலீசார் அகற்றினர்.
கடைகள் அகற்றப்பட்ட காட்சி.
கடைகள் அகற்றப்பட்ட காட்சி.
Published on

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் 4 ரோடு பகுதி, கபிலர்மலை ரோடு மற்றும் டாஸ்மாக் கடை முன்பு உள்ள பழைய பைபாஸ் சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக‌ கடைகள் வைக்கப்பட்டிருப்பதாகவும், அந்த கடைகளில் அனுமதியின்றி மது விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் கிடைத்தது. 

அதன்பேரில் பரமத்திவேலூர் டி.எஸ்.பி. ராஜாரணவீரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் வீரம்மாள் மற்றும் போலீசார் ஆக்கிரப்பு செய்து சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்த கடைகள் மற்றும் மீன் கடைகளை‌‌ அகற்றினர்.

மேலும் ஆக்கிரமிப்பு கடைகளுக்கு அருகே தண்ணீர் தேங்கி நின்றதால்‌ கொசு உற்பத்தியாகி நோய் பரவும் என்பதால் அப்பகுதியில் பொத்தனூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சுண்ணாம்பு பவுடர் தெளித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

போக்குவரத்துக்கு இடையூறாக இந்த பகுதியில் கடை மற்றும் மீன் கடைகள்‌ வைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என டி.எஸ்.பி. ராஜாரணவீரன் எச்சரிக்கை விடுத்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com