ராசிபுரம் அருகே அனுமதி இல்லாமல் செயல்பட்ட சாயபட்டறைகள் அகற்றம்

ராசிபுரம் அருகே அனுமதி இன்றி செயல்பட்ட சாயப்பட்டறைகள் அதிகாரிகள் முன்னிலையில் அகற்றப்பட்டன.
.
.
Published on

ராசிபுரம்:

ராசிபுரம் அருகே கூனவேலம்பட்டி புதூர் மற்றும் சந்திரசேகரபுரம் கிராமத்தில் அனுமதி இல்லாமல் சாயப்பட்டறைகள் இயங்கி வருவதாக மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. 

மாவட்ட சுற்றுச்சூழல் என்ஜினீயர் ரவிக்குமார், பறக்கும்படை மாவட்ட சுற்றுச்சூழல் என்ஜினீயர் செல்வகுமார், உதவி என்ஜினீயர்கள் குணசேகரன், இளையராஜா ஆகியோர் கூனவேலம்பட்டி கிராமத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். 

கூனவேலம்பட்டி புதூரில் ராமச்சந்திரன் மற்றும் சகுந்தலா ஆகியோர் அனுமதி இல்லாமல் சாயப்பட்டறைகள் நடத்தி வந்ததை அறிந்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அனுமதி இல்லாமல் செயல்பட்ட அந்த சாயப்பட்டறைகளை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றினர். 

அதேபோல் சந்திரசேகரபுரத்தில் அனுமதி இல்லாமல் செயல்பட்டு வந்த பூபதி, பழனியப்பன் ஆகியோரது சாயப்பட்டறைகளையும் சுற்றுச்சூழல் அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com