கோப்பணம்பாளையம் அருகே பொதுமக்களை அச்சுறுத்திய விஷ வண்டுகள்

கோப்பணம்பாளையம் அருகே பொதுமக்களை அச்சுறுத்திய விஷ வண்டுகள் அகற்றப்பட்டது.
.
.
Published on

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையத்தை சேர்ந்தவர் பெரியசாமி (50). இவரது தோட்டம் அருகே புளியமரம் உள்ளது.  அதில் ஆயிரக்கணக்கான விஷ வண்டுகள் கூடுகட்டி இருந்தன. அவை அந்த வழியாக சென்றவர்களை தீண்டி அச்சுறுத்தி வந்தது. 

இதுகுறித்து பெரியசாமி வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்.  நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான தீயணைப்பு  வீரர்கள் விரைந்து   சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து விஷ வண்டுகளை அகற்றினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com