மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த லாரி டிரைவர் பலி

ஜேடர்பாளையத்தில் மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்த லாரி டிரைவர் பரிதாபமாக இறந்தார்.
.
.
Published on

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே கண்டிப்பாளையைம் பகுதியை சேர்ந்த பொன்னுசாமி மகன் சுகுமார் (24).லாரி டிரைவர். இவர் தனது மோட்டார் சைக்கிளில் ஆனங்கூர் அருகே உள்ள கழுவங்காடு பகுதிக்கு சென்றார். 

அப்போது நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளுடன் தார் சாலையில் கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு  சிகிச்சை பலனின்றி சுகுமார்  உயிரிழந்தார்.  

இது குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com