பள்ளிபாளையம் அருகே தனியார் நூல் மில்லில் தீ விபத்து

பள்ளிபாளையம் அருகே தனியார் நூல் மில்லில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
.
.
Published on

பள்ளிபாளையம்:

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே சில்லாங்காடு பகுதியில் ஒரு தனியார் நூல் மில் உள்ளது. இந்த மில்லில்  திடீரென தீ்ப்பிடித்தது. சிறிது நேரத்தில் தீ மளமளவென வேறு பகுதிகளுக்கும் பரவ தொடங்கியது. 

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மில் தொழிலாளர்கள் தண்ணீைர ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அணைக்க முடியவில்லை. இதையடுத்து வெப்படை தீயணைப்பு படை நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். எனினும் இந்த தீ விபத்தில் மில்லில் வைக்கப்பட்டிருந்த ஏராளமான நூல் மூட்டைகள் எரிந்து சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து பள்ளிபாளையம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று மின்கசிவு காரணமாக தீப்பிடித்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடத்தினர். மேலும் சேத விவரத்தையும் கணக்கிட்டு வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com