

நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் தொழிலாளர் நலத்துறை ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் குடியரசு தினத்தன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்களில் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின்போது தொழிலாளர்களுக்கு கட்டாயம் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப் படுகிறதா? அவர்களுக்கு அன்றைய தினம் இரட்டிப்பு சம்பளமோ அல்லது 3 நாட்களுக்குள் ஒருநாள் மாற்று விடுப்போ வழங்கப்படுவதாக, சம்பந்தப்பட்ட நிர்வாகம் அதற்குரிய படிவத்தை தொழிலாளர் உதவி ஆய்வாளர் அலுவல கத்தில் சமர்ப்பித்து இருக்கின்றார்களா? என்பதை ஆய்வு செய்தனர்.
28 கடைகளில் ஆய்வு செய்ததில் 16 கடைகளிலும், 48 உணவு நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் 26 உணவு நிறுவனங்களிலும், 7 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் ஆய்வு செய்தனர்.
இதில், 4 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களிலும் என மொத்தம் 83 நிறுவனங்களில் ஆய்வு செய்ததில், 46 நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு குடியரசு தினத்தன்று விடுமுறை அளிக்காததும், அன்றைய தினம் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்க தொழிலாளர் உதவி ஆய்வாளர்களிடம் ஒப்புதல் பெறாமல் பணிக்கு அமர்த்தியதும் கண்டறியப்பட்டது.
இதைத்தொடர்ந்து 46 நிறுவனங்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.