ராசிபுரத்தில் ரூ.1.85 கோடிக்கு பருத்தி விற்பனை

ராசிபுரம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்தில் ரூ.1.85 கோடிக்கு பருத்தி விற்பனை ஆனது.
.
.
Published on

ராசிபுரம்:

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை கூடத்தின் சார்பில் கவுண்டம்பாளையம் ஏலை மையத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது.

இதில் ஆர்.சி.எச்.ரக மூட்டைகள் 4746ம், டி.சி.எச்.ரக மூட்டைகல் 446ம், கொட்டு ரகம் 343ம், என மொத்தம் 5535 மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

இதில் ஆர்.சி.எச்.ரகம் குறைந்த பட்சமாக குவிண்டால் ரூ.9412 முதல் அதிகபட்சமாக ரூ.10769 வரை விற்பனை ஆனது. 

டி.சி.எச். ரகம் குறைந்த பட்சமாக குவிண்டால் ரூ.14559 முதல் அதிகபட்சமாக ரூ.15799 வரை விற்பனை ஆனது. 

கொட்டு ரகம் குறைந்த பட்சமாக குவிண்டால் ரூ.5450 முதல் அதிகபட்சமாக ரூ.7499 வரை விற்பனை ஆனது. 

மொத்தம் ரூ.1.85 கோடிக்கு பருத்தி வர்த்தகம் நடைபெற்றது. இதில் ராசிபுரம் சுற்ருப்பகுதியை சேர்ந்த விவசாயிகள், வியாபாரிகள் கலந்துகொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com