திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலுக்குள் தடையை மீறி செல்ல முயன்ற நாம் தமிழர் கட்சியினர் கைது

கோவிலில் தமிழக அரசு உத்தரவுப்படி தமிழில் அர்ச்சனை நடந்து வருகிறது. கோவிலில் தமிழில் அர்ச்சனை நடைபெற வேண்டும் என்று கோரி மனு கொடுக்க கோவில் அலுவலகத்துக்குள் செல்ல முயன்றனர்.
கைதான நாம்தமிழர் கட்சியினரை போலீசார் வேனில் ஏற்றிய காட்சி. 
கைதான நாம்தமிழர் கட்சியினரை போலீசார் வேனில் ஏற்றிய காட்சி. 
Published on

 கடலூர்:

கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் பிரசித்திப்பெற்ற பாடலீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தமிழக அரசு உத்தரவுப்படி தமிழில் அர்ச்சனை நடந்து வருகிறது. எனினும் இன்று காலை நாம்தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் சாமி ரவி தலைமையில் கட்சி நிர்வாகிகள் திடீர் என பாடலீஸ்வரர் கோவிலுக்கு வந்தனர். 

அப்போது கோவிலில் தமிழில் அர்ச்சனை நடைபெற வேண்டும் என்று கோரி மனு கொடுக்க கோவில் அலுவலகத்துக்குள் செல்ல முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீஸ் டி.எஸ்.பி. கரிக்கால் பாரி சங்கர் தலைமையில் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி மற்றும் போலீசார் நாம் தமிழர் கட்சியினரை தடுத்தனர். இதனால் போலீசாருக்கும், நாம் தமிழர் கட்சியினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை மீறி நாம்தமிழர் கட்சியினர் கோவிலுக்குள் செல்ல முயன்றனர். உடனே போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com