தொழிலாளியை வெட்டிய வாலிபர் கைது

வேதாரண்யத்தில் தொழிலாளியை வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

வேதாரண்யம்:

வேதாரண்யம் தாலுகா ஆயக்காரன்புலம் 3ம் சேத்தி திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன் மகன் சந்திரசேகரன் (22). அதே பகுதியைச் சேர்ந்த முருகையன் மகன் பிரகாஷ் (17). இவர்கள் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஆந்திராவில் கூலி வேலை  பார்த்து வந்துள்ளனர். 

பின்னர் ஊருக்கு வந்துள்ளனர். இந்நிலையில் ஆந்திராவில்  கூலி வேலை பார்த்ததற்கு சந்திரசேகருக்கு பணம் வந்துள்ளது. அந்த பணத்தை சந்திரசேகரன் பிரகாஷுக்கு கொடுக்காமல் மற்ற நண்பர்களுக்கு பிரித்து கொடுத்துள்ளார்.

இந்நிலையில் நண்பரு டன் சந்திரசேகரன் பேசி க்கொண்டு இருந்தபோது அந்த பகுதிக்கு வந்த பிரகாஷ் என் பணத்தை கொடு் என்று கேட்டுள்ளார். அதற்கு சந்திரசேகரன் பணத்தை ஆந்திராவில் வேலை பார்த்த இடத்தில் போய் வாங்கிக்கொள் என்று கூறியுள்ளார். 

இதனை அடுத்து இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

 அப்போது பிரகாஷ் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சந்திரசேகரனை வெட்டியுள்ளார்.

 அக்கம் பக்கத்தினர் சந்திரசேகரனை வேதாரண்யம் அரசு மருத்துவமனையிலும், பின்பு மேல் சிகிச்சைக்காக நாகப்ப ட்டினம் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் இதுகுறித்து வாய்மேடு சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரகாஷை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com