ஆதீன குருபூஜை விழாவில் நூல் வெளியீடு

திருப்புகலூர் வேளாக்குறிச்சி ஆதீன குருபூஜை விழாவில் நூல் வெளியீடு விழா நடைபெற்றது.
குருபூஜை விழாவில் நூல் வெளியீடு
குருபூஜை விழாவில் நூல் வெளியீடு
Published on

நாகப்பட்டினம்:

திருப்புகலூர் வேளாக்குறிச்சி ஆதீன திருமடத்தில் நடைபெற்ற மகாகுருபூஜை விழாவில் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. 

வேளாக்குறிச்சி ஆதீன முனிபுங்கவர்களில் ஒருவரான ஸ்ரீகாழி மறைஞானதேசிகர் அருளிச்செய்த சிவபுண்ணியத் தெளிவு நூல் வேளாக்குறிச்சி ஆதீன வெளியீடாக, வேளாக் குறிச்சி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சத்தியஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள் நூலை வெளியிட்டார். 

இதில் தருமை ஆதீனம் ராஜன்கட்டளை ஸ்ரீமத் மாணிக்க வாசக தம்பிரான் சுவாமிகள், சூரியானார் கோவில் ஆதீனம், ஸ்ரீமத் சிவாக்கிரயோகி சுவாமிகள் ஆகியோர் நூலை பெற்று க்கொண்டனர். முன்னதாக முனைவர் ராஜேஸ்வரன், புலவர் விவேகானந்தன் ஆகியோரின் உரையரங்கம் நடைபெற்றது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com