சிலம்பம் போட்டியில் அதிக பதக்கம் வென்ற குழந்தைகளுக்கு பாராட்டுகள்

சஞ்சய், சாதனா, கீர்த்தனா வெண்கல பதக்கம் பெற்றனர். வெற்றி பெற்ற குழந்தைகளுக்கும், சிலம்ப பள்ளி நிர்வாகிகளுக்கும், அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

குடிமங்கலம்:

குடிமங்கலம் ஒன்றியம் இலுப்பநகரம் கிராமத்தில், வீரத்தமிழன் சிலம்பாட்ட பள்ளி சார்பில் தன்னார்வ முறையில், குழந்தைகளுக்கு சிலம்பம் கற்பிக்கப்படுகிறது.இப்பயிற்சி பெற்று வரும் கிராம குழந்தைகள், கோவை நேரு தொழில்நுட்ப கல்லூரியில் நடந்த, தென்னிந்திய அளவிலான சிலம்ப போட்டியில் பங்கேற்று அதிக வெற்றிகளை பெற்றுள்ளனர். சபரி, மான்ஷிதா, மகிஷா, வைஸ்ணவ் தங்கப்பதக்கமும், சுவாதி, ஸ்ரீஅகிலன், சர்வேஷ் வெள்ளிப்பதக்கமும், சஞ்சய், சாதனா, கீர்த்தனா வெண்கல பதக்கமும் பெற்றனர்.வெற்றி பெற்ற குழந்தைகளுக்கும், சிலம்ப பள்ளி நிர்வாகிகளுக்கும், அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com