நெல்லையில் குதிரையை வெட்டி கொன்ற மர்மநபர்கள்

தச்சநல்லூர் அருகே உள்ள தேனீர்குளத்தை சேர்ந்தவர் தனுஷ்கோடி. இவர் சொந்தமாக குதிரைகள் வளர்த்து வருகிறார்.அதில் ஒரு ஆண் குதிரை நடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தது.
இறந்து கிடக்கும் குதிரையை படத்தில் காணலாம். 
இறந்து கிடக்கும் குதிரையை படத்தில் காணலாம். 
Published on

நெல்லை:

நெல்லை தச்சநல்லூர் அருகே உள்ள தேனீர்குளத்தை சேர்ந்தவர் தனுஷ்கோடி. இவர் சொந்தமாக குதிரைகள் வளர்த்து வருகிறார். அதில் ஒரு ஆண் குதிரை நடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தது. இதைத்தொடர்ந்து குதிரைக்கு லாடம் கட்டுவதற்காக தனுஷ்கோடி, அதனை டவுன் பழனிதெருவில் உள்ள உறவினர் வீட்டு தொழுவத்தில் கட்டி வைத்திருந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு அங்கு புகுந்த மர்மநபர்கள் குதிரையை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு சென்றனர். இன்று காலை வெட்டுக்காயங்களுடன் குதிரை உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதனை பார்த்தவர்கள் குதிரையை மீட்டு ராமையன்பட்டியில் உள்ள கால்நடை மருத்து வமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் குதிரை உயிரிழந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com