கோவையில் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்த மர்மநபர்கள்

கண்காணிப்பு காமிராவில் சிக்காமல் இருக்க மின் இணைப்பை துண்டித்தனர் சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.
கோவையில் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்த மர்மநபர்கள்
Published on

கோவை,

கோவை கோவில்பாளையம் அருகே உள்ள கள்ளிப்பாளையத்தில் ஆவாரங்காட்டு மாரியம்மன் கோவில் உள்ளது. கோவிலை சம்பவத்தன்று இரவு பூசாரி வழக்கம் போல பூட்டி விட்டு சென்றார்.

நள்ளிரவு கோவிலின் கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர். பின்னர் அவர்கள் கோவிலில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டு இருந்ததால் அதில் காட்சிகள் பதிவாகாமல் இருக்க மின் இணைப்பை துண்டித்தனர்.

இதனை தொடர்ந்து மர்மநபர்கள் கோவிலில் இருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த ரூ,30 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

மறுநாள் காலையில் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு உண்டியலில் உள்ள பணம் கொள்ளை போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர்கள் இது குறித்து கோவில்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.

அவர்கள் கோவிலில் பதிவாகி இருந்த மர்ம நபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இதனை வைத்து கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து காண்காணிப்பு காமிரா காட்சிகள் மூலம் போலீசில் சிக்காமல் இருக்க மின் இணைப்பை துண்டித்து விட்டு உண்டியலை உடைத்து ரூ.30 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com