பூச்சியூர் அருகே இரவு நேரங்களில் சுற்றி திரியும் மர்மநபர்கள்

100க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது.
பூச்சியூர் அருகே இரவு நேரங்களில் சுற்றி திரியும் மர்மநபர்கள்
Published on

வடவள்ளி,

கோவை ஓனப்பாளையம் அடுத்த பூச்சியூரில் பூபதி ராஜா நகர் உள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியையொட்டி அரசுக்கு சொந்தமான நிலம் உள்ளது.

இந்த நிலம் முழுவதும் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது. இதனை பயன்படுத்தி இரவு நேரங்களில் சிலர் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மேலும் மது போதையில் அருகில் இருக்கும் வீடுகளின் கதவையும் தட்டி வருகின்றனர். இதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இதன் காரணமாக மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செடி, கொடிகளை அகற்றினர். இருப்பினும் சமூக விரோதிகள் இங்கு இரவு நேரங்களில் சுற்றி திரிவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். எனவே இந்த இடத்தை அரசு கையகப்படுத்தி தங்கள் பகுதி மக்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கலெக்டர், பேரூர் தாசில்தாரிடம் மனு அளிக்க உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com