2 கோவில்களில் நகை-பணம் கொள்ளை

கோவிலின் உண்டியலை உடைத்து உண்டியலிலிருந்த சுமார் 20 ஆயிரம் பணத்தையும் திருடி சென்றுள்ளனர்.போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 கோவில்களில் நகை-பணம் கொள்ளை
Published on

மயிலம்:

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே கள்ள கொளத்தூர் கிராமத்தில் அமைந்துள்ளது பொன்னியம்மன் கோவில். நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் கோவிலின் கதவை உடைத்து உள்ளே சென்று கோவிலின் உள்ளே இருந்த ஒரு பவுன் வேல் மற்றும் 1¼ பவுன் தாலியை திருடி சென்றுள்ளனர்.

மேலும் கோவிலின் உண்டியலை உடைத்து உண்டியலிலிருந்த சுமார் 20 ஆயிரம் பணத்தையும் திருடி சென்றுள்ளனர்.

இதே போல் அதே பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலிலும் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கைவரிசையை காட்டியுள்ளனர். நள்ளிரவில் ஆஞ்சநேயர் கோவிலுக்குள் சென்ற மர்ம நபர்கள் கோவில் உண்டியலை உடைத்து அதில் இருந்த சுமார் 30 ஆயிரம் பணத்தை திருடி சென்றுள்ளனர்.

இன்று காலை கோவிலுக்கு வந்த பொதுமக்கள் கோவிலின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அங்கு உண்டியலில் இருந்த பணம் மற்றும் நகை திருடப்பட்டது குறித்து மயிலம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் கமலஹாசன் தலைமையிலான போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com