தூய்மை பணிகள் குறித்து மாநகராட்சி கமிஷனர் ஆய்வு

தூய்மைப்பணிகள் மேற்கொள்ளும் தூய்மை பணியாளர்களின் வருகை பதிவேடுகளை ஆய்வு செய்தார். தூய்மை பணிகளை தங்கு தடையின்றி மேற்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
தூய்மை பணிகள் குறித்து மாநகராட்சி கமிஷனர் ஆய்வு
Published on

திருப்பூர் :

திருப்பூர் மாநகராட்சி புதிய கமிஷனராக பொறுப்பேற்றுள்ள பவன்குமார் இன்று காலை முதல் மாநகராட்சியின் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். அதன்படி மாநகராட்சி பகுதிகளில் தூய்மைப்பணிகள் மேற்கொள்ளும் தூய்மை பணியாளர்களின் வருகை பதிவேடுகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர்கள் மேற்கொள்ளும் பணிகள் குறித்து கேட்டறிந்து, தூய்மை பணிகளை தங்கு தடையின்றி மேற்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

மேலும் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் மற்றும் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் மற்றும் தூய்மை பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com