திண்டுக்கல்லில் ஆணழகன் போட்டி நடைபெற்றது.

திண்டுக்கல்லில் ஆணழகன் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
மிஸ்டர் திண்டுக்கல் பட்டம் வென்ற கல்லூரி மாணவர் சிவின்ராய்க்கு  நாட்டாமை காஜாமைதீன் பரிசு வழங்கினார்.
மிஸ்டர் திண்டுக்கல் பட்டம் வென்ற கல்லூரி மாணவர் சிவின்ராய்க்கு நாட்டாமை காஜாமைதீன் பரிசு வழங்கினார்.
Published on

திண்டுக்கல்:

திண்டுக்கல்லில் மாவட்ட அமெச்சூர் ஆணழகன் சங்கம் மற்றும் திண்டுக்கல் மாவட்ட உடற்பயிற்சி நிலைய உரிமையாளர்கள் சங்கம் இணைந்து 29 வது மிஸ்டர். திண்டுக்கல் 2022 மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டியினை நடத்தியது.

இப்போட்டியில் திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து 15 க்கும் மேற்பட்ட உடற்பயிற்சி கூடங்களில் இருந்து 200 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இதில் ஜூனியர் , சீனியர், மற்றும் மாஸ்டர், 55, 60, 65, 70, 75, 80, 85 ஆகிய எடை பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.  

8 மாதிரியான உடலமைப்பு பாவனை, உடற்கட்டு திறனை வைத்து போட்டியில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.

அனைத்து பிரிவுகளில் முதலிடம் பிடித்த போட்டியாளர்களிடையே நடந்த போட்டியில் வெற்றி பெற்ற போட்டியாளருக்கு சாம்பியன் ஆப் சாம்பியன் பட்டம் வழங்கப்பட்டது. திண்டுக்கல் ஆணழகன் 2022 பட்டத்தை 18 வயது கல்லூரி மாணவர் சிபின்ராய் பெற்றார்.

இறுதியில் அதிக புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்த அர்னால்டு உடற்பயிற்சி கூடத்திற்கு கோப்பை வழங்கப்பட்டது. இப்பரிசினை  மாவட்ட ஹாக்கி சங்க தலைவர் நாட்டாண்மை காஜாமைதீன் வழங்கினார்.

இப்போட்டிக்கான ஏற்பாடுகளை அமெச்சூர் ஆணழகன் சங்க மாவட்டத் தலைவர் ஜான் வில்லியம் லாரன்ஸ், செயலர் சதீஷ்குமார் பொருளாளர் ராஜ்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com