திருவெண்ணைநல்லூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்- பூண்டு வியாபாரி சாவு

தனது மோட்டார் சைக்கிளில் பூண்டு வியாபாரம் செய்வதற்காக திருக்கோவிலூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். சுயநினைவு இழந்ததால் அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என விவரம் தெரியவில்லை .
திருவெண்ணைநல்லூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்- பூண்டு வியாபாரி சாவு
Published on

விழுப்புரம்: 

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள கோபாலபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 52). பூண்டு வியாபாரி. இவர் நேற்று மாலை ஏழுமலை தனது மோட்டார் சைக்கிள் பூண்டு வியாபாரம் செய்வதற்காக திருக்கோவிலூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். பெரியசெவலை அருகே செல்லும்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ஏழுமலை மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் ஏழுமலை பலத்த காயம் அடைந்தார். உடனே அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்லும் வழியிலேயே இறந்து விட்டார்.

எதிரே மோதிய 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் தலையில் அடிபட்டு சுயநினைவு இழந்ததால் அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என விவரம் தெரியவில்லை .அவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com