மோட்டார் சைக்கிள் மோதி எலக்ட்ரீசியன் சாவு

அனுமந்தீர்த்தம் பகுதி அருகே வந்தபோது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்கு ள்ளானது.விபத்தில் பலத்த காயமடைந்த வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
மோட்டார் சைக்கிள் மோதி எலக்ட்ரீசியன் சாவு
Published on

தருமபுரி,

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே சடையம்பட்டி வெங்கடேசன் (வயது45). எலக்ட்ரீசியன். இவருக்கு திருமணமாகி வள்ளி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். வள்ளி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று வெங்கடேசன் பொய்யப்பட்டியில் வேலைக்காக தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் மாலையில் வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது அவர் அனுமந்தீர்த்தம் பகுதி அருகே வந்தபோது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்கு ள்ளானது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த அரூர் போலீசார் உடனே அங்கு விரைந்து வெங்க டேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி ன்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com