மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றவர் சாவு

சுப்பிரமணிய நகர் 2-வது கேட் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது அந்த வழியே வந்த ஒரு மொபட் எதிர்பாராதவிதமாக ரமேஷ் மீது மோதியது.
மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றவர் சாவு
Published on

கொண்டலாம்பட்டி:

சேலம் சூரமங்கலம் முல்லைநகர் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 50). இவர் கடந்த மாதம் 21-ந் தேதி சுப்பிரமணிய நகர் 2-வது கேட் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே வந்த ஒரு மொபட் எதிர்பாராதவிதமாக ரமேஷ் மீது மோதியது.

இதில் படுகாயமடைந்த அவர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து அவரது மனைவி சாந்தி கொடுத்த புகாரின் பேரில் சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com