துபாய் கடலில் மூழ்கி இறந்த மகனின் உடலை மீட்டு தரக்கோரி கண்ணீர் மல்க கலெக்டரிடம் தாய் மனு

பொது மக்களுடன் சேர்ந்து சசி கடலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு நேரில் வந்தனர். இறந்த போன எனது மகன் பிரதீப் உடலை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர்.
கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் வெளிநாட்டில் இறந்த மகனின் உடலை மீட்டு தர கோரி தாய் குடும்பத்துடன் மனு கொடுக்க வந்த போது எடுத்த படம்.
கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் வெளிநாட்டில் இறந்த மகனின் உடலை மீட்டு தர கோரி தாய் குடும்பத்துடன் மனு கொடுக்க வந்த போது எடுத்த படம்.
Published on

கடலூர்:

கடலூர் மாவட்டம் சிதம்பரம் முடசல் ஓடை சேர்ந்தவர் பிறை மாறன். இவரது மனைவி சசி. இன்று காலை கண்ணீர் மல்க தனது குடும்பத்தார், பொது மக்களுடன் சேர்ந்து சசி கடலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு நேரில் வந்தனர். அவர்கள் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நாங்கள் கடந்த 30 ஆண்டுகளாக முடசல் ஓடை மீனவ கிராமத்தில் வசித்து வருகின்றோம். எங்களின் மூத்த மகன் பிரதீப் (வயது 24). கடந்த 2021-ம் ஆண்டு துபாய் நாட்டிற்கு சென்றார். அங்கு சுற்றுலா படகில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் ஏப்ரல் 29-ந்தேதி பணியில் இருக்கும் போது கடல் நீரில் மூழ்கி இறந்து விட்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. அங்கு உள்ள வர்கள் இறந்த போன எனது மகன் பிரதீப் உடலை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள தாக தெரிவித்தனர். பிரதீப் உடலை நேற்று 1-ந்தேதி கண்டெடுத்து உள்ளதாகவும் தகவல் அளித்தனர்.எனவே எங்கள் மகனின் உடலை விரைந்து மீட்டு தாயகம் கொண்டு வந்து சேர்க்க அரசின் சார்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டு இருந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com