மரக்காணம் அருகே 2 பெண் குழந்தைகளின் தாய் தூக்குபோட்டு தற்கொலை

வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்த பிறகு, ஆரம்பித்த தொழிலில் பிரகாஷ்க்கு நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தீபிகா, கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டாரா? குடும்பத் தகராறு காரணமா?
மரக்காணம் அருகே 2 பெண் குழந்தைகளின் தாய் தூக்குபோட்டு தற்கொலை
Published on

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பம் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 40). இவர் வெளிநாட்டிற்கு சென்று திரும்பி வந்து உள்ளூரிலேயே தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி பிளஸ்-2, 10-ம் வகுப்பு பயிலும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்த பிறகு, ஆரம்பித்த தொழிலில் பிரகாஷ்க்கு நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் கடன் அதிகரித்து பிரகாஷ்க்கும் அவரது மனைவி தீபிகாவிற்கும் (35) இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் இன்று வீட்டிலிருந்த மின்விசிறியில் தூக்கு போட்டு இறந்த நிலையில் தீபிகா தொங்கினார். இதனைக் கண்ட அவரது பெண் குழந்தைகள் கதறி அழுதபடி தந்தை பிரகாஷிடம் கூறினர்.

இது தொடர்பான புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மரக்காணம் போலீசார், தீபிகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கனகசெட்டிக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.தற்கொலை செய்து கொண்ட தீபிகா, கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டாரா? குடும்பத் தகராறு காரணமா? அல்லது வேறு ஏதும் காரணமா என்பது குறித்து மரக்காணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 2 பெண் குழந்தைகளின் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com