3 குழந்தைகளுடன் தாய் மாயம்

மீண்டும் வெளியே சென்றுவிட்டு இரவு வந்து பார்த்தபோது தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளையும் காணவில்லை.பதறிப்போன பசுபதி அவர்களை உறவினர்கள் வீடுகளில் தேடிபார்த்தார்.
3 குழந்தைகளுடன் தாய் மாயம்
Published on

தருமபுரி,

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அனுமந்தபுரம் முனியப்பன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பசுபதி. இவரது மனைவி செவ்வந்தி (வயது30). இவர்களுக்கு கவியரசு (10) என்ற மகனும், காவ்யா (7), நதியா (5) என்ற மகள்களும் உள்ளனர். இதில் கவியரசு அரசு பள்ளியில் 5-ம் வகுப்பும், காவ்யா 2-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி பசுபதி தோட்டத்திற்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்தார். அப்போது செவந்தி சமையல் செய்யாமல் இருந்துள்ளார். இதனால் அவர் தனது மனைவியை திட்டியுள்ளார். பின்னர் அவர் மீண்டும் வெளியே சென்றுவிட்டு இரவு வந்து பார்த்தபோது தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளையும் காணவில்லை.

இதனால் பதறிப்போன பசுபதி அவர்களை உறவினர்கள் வீடுகளில் தேடிபார்த்தார். எங்கும் தேடியும் அவர்கள் கிடைக்காததால் மாயமானது தெரியவந்தது. இதுகுறித்து பாலக்கோடு போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து 3 குழந்தைகளுடன் மாயமான செவ்வந்தியை தேடிவருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com