மகாராஜா கடை அருகே தாய்-மகள் நீரில் மூழ்கி பலி

ராஜேஸ்வரி, சிவன்யா வீட்டின் அருகில் உள்ள பெரிய ஏரிக்கு துணி துவைப்பதற்காக சென்றுள்ளனர். சிவன்யா எதிர்பாராதவிதமாக ஏரியில் தவறி விழுந்தார்.
மகாராஜா கடை அருகே தாய்-மகள் நீரில் மூழ்கி பலி
Published on

கிருஷ்ணகிரி:

திருவண்ணாமலை மாவட்டம், புதூர் செங்கம் அடுத்துள்ள உண்ணாமலை பாளையம் பகுதியை சேர்ந்தவர் வசந்த் (வயது22). கட்டிட மேஸ்திரியான இவரது மனைவி ராஜேஸ்வரி (22). இவர்களுக்கு சிவன்யா என்கிற 4 வயதில் பெண் குழந்தை உள்ளது. தற்போது வசந்த் குடும்பத்துடன் கிருஷ்ணகிரி அருகே உள்ள கே.பூசாரிப்பட்டி கன்னியப்பன் நகரில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று வசந்த் வேலைக்கு சென்று வீடு திரும்பினார். பின்னர் ராஜேஸ்வரி மற்றும் குழந்தை சிவன்யா ஆகிய இருவரும் வீட்டின் அருகில் உள்ள பெரிய ஏரிக்கு துணி, துவைப்பதற்காக சென்றுள்ளனர்.

அப்போது சிவன்யா எதிர்பாராதவிதமாக ஏரியில் தவறி விழுந்தார். இதில் தத்தளித்த அவரை ராஜேஸ்வரி காப்பாற்றுவதற்காக ஏரியில் குதித்துள்ளார். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் இருவரும் நீரில் மூழ்கி இறந்தனர்.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மகாராஜா கடை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தாய்-மகள் இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com