அரசு கலைக்கல்லூரி உள்ளே புகுந்த உடும்பு

7 கிலோ எடையுள்ள உடும்பு ஒன்று அலுவலக வளாகத்தில் நுழைந்தது‌.வனத்துறையினர் உடும்பை பிடித்து கூண்டில் அடைத்தனர்.
அலுவலக வளாகத்தில் நுழைந்து நீண்ட நேரம் ஒரே இடத்தில் இருந்த உடும்பை  படத்தில் காணலாம்.
அலுவலக வளாகத்தில் நுழைந்து நீண்ட நேரம் ஒரே இடத்தில் இருந்த உடும்பை படத்தில் காணலாம்.
Published on

தருமபுரி,

தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அலுவலகம் அமைந்துள்ளது. இந்நிலையில் சுமார் 7 கிலோ எடையுள்ள பெரிய அளவிலான உடும்பு ஒன்று அலுவலக வளாகத்தில் நுழைந்தது. தொடர்ந்து ஒரு பகுதியில் நீண்ட நேரமாக அசைவற்ற நிலையில் படுத்துக் கிடந்துள்ளது.

இதைக் கண்ட பணியாளர்கள் அருகில் உள்ள வனத்துறை அலுவலகத்துக்கு தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து தருமபுரி வனத்துறை அதிகாரிகளின் உத்தரவின்பேரில் வனவர்கள் முனியப்பன், நாகேந்திரன் ஆகியோர் பாம்புகளை பிடிக்கப் பயன்படுத்தும் பிரத்தியேக உபகரணங்களைப் பயன்படுத்தி அந்த உடும்பை இலாவகமாக பிடித்து கூண்டில் அடைத்தனர்.

இதனை தொடர்ந்து வனத்துறை அதிகாரிகளின் வழிகாட்டுதல்படி அந்த உடும்பை அருகில் உள்ள காப்புக்காட்டில் பாதுகாப்பாக விடுவித்தனர். தொடர்ந்து நீண்ட நேரமாக உடும்பு, அரசு அலுவலகத்தில் சுற்றி திரிந்ததால், அரசு அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com