இளம்பெண்ணின் வங்கி கணக்கில் பணம் அபேஸ் வாலிபர்

ரூ.40 ஆயிரம் பணத்தை அபேஸ் செய்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்
இளம்பெண்ணின் வங்கி கணக்கில் பணம் அபேஸ் வாலிபர்
Published on

கோவை,

கோவை குனியமுத்தூர் அருகே உள்ள ராஜ நாயக்கர் தோட்டத்தைச் சேர்ந்தவர் நாகராஜ் இவரது மனைவி விஜயலட்சுமி( வயது 30). நேற்று இவர் பணம் எடுப்பதற்காக அந்த பகுதியில் உள்ள 2 ஏடிஎம் மையங்களுக்கு சென்றார். ஏடிஎம் கார்டு பயன்படுத்தி விஜயலட்சுமி பணத்தை எடுக்க முடியவில்லை இதனையடுத்து அவர் அங்கு வந்த வாலிபர் ஒருவரின் உதவியை நாடினார் அவர் உதவி செய்வது போல நடித்து விஜயலட்சுமியின் ஏடிஎம் கார்டு மற்றும் பின் நம்பரை பயன்படுத்தி அவருக்கு தெரியாமல் ரூ.40 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு தப்பி சென்றார் இது குறித்து விஜயலட்சுமி குனியமுத்தூர் போலீஸ் இன் புகார் செய்தார் புகார் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இளம் பெண்ணுக்கு உதவி செய்வது போல நடித்து அவரது வங்கி ஏடிஎம் கார்டை பயன்படுத்தி 40 ஆயிரம் பணத்தை அபேஸ் செய்த வாலிபரை தேடி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com