நடைபயிற்சி சென்று பொதுமக்களிடம் மனுக்களை பெற்ற எம்.எல்.ஏ.

விளாத்திகுளம் அருகே உள்ள வீரபட்டி கிராமத்தில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. நடைபயிற்சி மேற்கொண்டார்சாலையில் சீம கருவேல மரங்களை உடனடியாக அகற்றி விட்டு மரக்கன்றுகளை நடவும் 1,500 பனை விதைகளை பொது இடங்களில் நடவும் ஆலோசனை வழங்கினார்.
நடைபயிற்சியின் போது பொதுமக்களிடம் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. மனுக்களை பெற்ற காட்சி.
நடைபயிற்சியின் போது பொதுமக்களிடம் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. மனுக்களை பெற்ற காட்சி.
Published on

விளாத்திகுளம்:

விளாத்திகுளம் அருகே உள்ள வீரபட்டி கிராமத்தில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கிராம மக்களிடம் உற்சாகமாக நடைபயிற்சி மேற்கொண்டு அடிப்படை பிரச்சினைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார்.

இதனையெடுத்து விவசாய நிலங்களுக்கு செல்லும் பாதையில்பாலம் கட்டுவதற்கான இடத்தை ஆய்வு மேற்கொண்டார்.மழைக்காலத்திற்குள் வாறுகால் தூர்வாரும் பணியை விரைந்து முடிக்கவீரப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சுசிலா ராணியிடம் அறிவுறுத்தினார்.

மேலும் தோள்மலைபட்டி செல்லும் சாலையில் சீம கருவேல மரங்களை உடனடியாக அகற்றி விட்டு மரக்கன்றுகளை நடவும் 1,500 பனை விதைகளை பொது இடங்களில் நடவும் ஆலோசனை வழங்கினார்.

இந்த நிகழ்வில் புதூர் மேற்கு ஒன்றிய செயலார் மும்மூர்த்தி, கவுன்சிலர் பரமேஸ்வரி மாரியப்பன், வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், ஆதித்தமிழர் வடக்கு மாவட்ட பேரவை துணை தலைவர் வீரப்பட்டி சின்னராஜ், கனியமுதன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com