

எட்டயபுரம்:
எட்டயபுரம் அருகே உள்ள கீழ ஈரால் அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்தில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. திடீர் ஆய்வு செய்தார்.
அப்போது உள் நோயாளி சிகிச்சை பிரிவு, மகப்பேறு சிகிச்சை பிரிவு, ஆய்வகம், புற நோயாளி பிரிவு, நோயாளிகள் காத்திருப்பு கூடம், அவசர சிகிச்சை பிரிவு, சித்த மருத்துவ பிரிவு ஆகிய இடங்களில் திடீர் ஆய்வு செய்தார். மருத்துவ பணியா ளர்களி டம் அடிப்படை பிரச்சி னைகள் குறித்து குறைகளை கேட்டு அறிந்தார். மேலும் மருத்துவமனை வளாகத்தில் 100 மரக்கன்றுகள் வளர்க்க அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது சித்த மருத்துவர் கார்த்திகா, சுகாதார நிலைய கண்கா ணிப்பாளர் செந்தில் குமார், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. முன்னாள் இளைஞரணி அமைப்பாளர் இமானுவேல், கோவில்பட்டி தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதக் கண்ணன், கீழ ஈரால் தி.மு.க. கிளைச் செயலாளர், செவிலியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.