ஆவின் பால் உற்பத்தி நிறுவனத்தில் மத்திய இணை மந்திரி எல். முருகன் ஆய்வு

பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களிலிருந்து பால் கொள்முதல் செய்வது குறித்தும்,விற்பனை குறித்தும் மத்திய இணை மந்திரி எல்.முருகன் கேட்டறிந்தார்.
ஆவின் பால் உற்பத்தி நிறுவனத்தில் மந்திரி எல்.முருகன் ஆய்வு
ஆவின் பால் உற்பத்தி நிறுவனத்தில் மந்திரி எல்.முருகன் ஆய்வு
Published on

சித்தோடு:

ஈரோடு மாவட்டம் சித்தோட்டிலுள்ள ஆவின் நிறுவனத்தில் மத்திய கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை மந்திரி எல்.முருகன் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, ஆவின் நிறுவனத்திலுள்ள பால் குளிரூட்டும் பகுதி , பால்கோவா, வெண்ணெய், பால் பவுடர் உள்ளிட்ட ஆவின் பொருட்களை உற்பத்தி செய்யும் பகுதிகளை ஆய்வு செய்த மத்திய மந்திரி,  பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு  சங்கங்களிலிருந்து பால் கொள்முதல் செய்வது குறித்தும், விற்பனை குறித்தும் கேட்டறிந்தார்.

தொடர்ந்து ஆவின் நிறுவனத்தில் பால்வளத்துறை அதிகாரிகளுடன் அவர் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆயிவின் போது ஈரோடு மாவட்ட ஆட்சியர், பால்வளத்துறை ஆணையர் பிரகாஷ்  மற்றும் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com