எப்.எம்.ஜி தேர்வில் இந்திய அளவில் முதலிடம்- தமிழக மாணவருக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பாராட்டு

24 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதியதில் இந்திய அளவில் இக்கல்லூரியில் பயின்ற மாணவர் முதலிடம்.மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
எப்.எம்.ஜி தேர்வில் இந்திய அளவில் முதலிடம்- தமிழக மாணவருக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பாராட்டு
Published on

மாமல்லபுரம்:

மாமல்லபுரத்தில் உள்ள கிங்ஸ் மெடிக்கல் அகாடமியில் பயிற்சி பெற்று அதன் மூலமாக பிலிப்பைன்ஸ் நாட்டின் தாவோ மெடிக்கல் கல்லூரியில் படித்த மாணவர்கள், 2023ம் ஆண்டிற்கான எப்.எம்.ஜி தேர்வை இந்தியாவில் எழுதினர்.

24 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதியதில் இந்திய அளவில் இக்கல்லூரியில் பயின்ற மாணவர் கரீம் ஜாஃபர் சவுகர் முதலிடம் பிடித்து டாக்டர் ஆனார்.

அவர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனை சந்தித்து வாழ்த்து பெற்றார். அகாடமி நிறுவனர் டேவிட் கே.பிள்ளை, ம.தி.மு.க துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, இயக்குனர் சி.கே.சி.பால் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com