காரமடை அருகே மில் சூப்பர்வைசர் மர்மச்சாவு

உடனடியாக வேலுச்சாமியை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மனைவி இந்துசெல்வி மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
காரமடை அருகே மில் சூப்பர்வைசர் மர்மச்சாவு
Published on

கோவை,

கோவை காரமடை அருகே உள்ள வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 35). இவர் அந்த பகுதியில் உள்ள மில்லில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி இந்து செல்வி (27). இவர்களுக்கு 4 வயதில் ஒருமகள் உள்ளார்.

கடந்த 7 நாட்களுக்கு முன்பு வேலுச்சாமிக்கு கிட்னியில் கல் அடைப்பு ஏற்பட்டது. இதற்காக அவர் மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு சென்றார். பின்னர் குணமடைந்து வீட்டிற்கு திரும்பினார். வீட்டில் அவர் 3 நாட்கள் ஓய்வில் இருந்தார்.

மீண்டும் வேலுச்சாமி கடந்த 23-ந் தேதி வேலைக்கு சென்றார். அப்போது மில்லில் காவலாளியாக வேலை பார்க்கும் சார்லி என்பவர் வழக்கமாக வேலுச்சாமியை தூக்கி விளையாடுவது வழக்கம். அதேபோல சம்பவத்தன்று வேலைக்கு சென்ற அவரை தூக்கி விளையாடினார். அப்போது நிலைகுலைந்த வேலுச்சாமி தலை சுற்றி மயங்கி கீழே விழுந்தார். அவரது வாயிலும் மூக்கிலும் இருந்து ரத்தம் வந்தது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கு இருந்தவர்கள் உடனடியாக வேலுச்சாமியை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே வேலுச்சாமி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து அவரது மனைவி இந்துசெல்வி மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் காவலாளி விளையாட்டாக தூக்கியதால் வேலுச்சாமி இறந்தாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com